வால்நட்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதன் பயன்கள் தெரியுமா?

வால்நட்ஸ் தூக்கம் இன்றி அவதி படுவோர்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. மறதியால் கஷ்ட படுகிறீர்களா வால்நட்ஸ் சாப்பிடுங்க மறதியை மறந்து நினைவாற்றலை அதிகரிக்கலாம். வயதான பெரியவர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு எலும்புகள் வலுவிழந்து காணப்பட்டால் இதனை சாப்பிட நல்ல பலனை கொடுக்கும்.
இதில் அதிக அளவில் இருக்கும் புரத சத்துக்கள் உடலுக்கு ஊட்டம் கொடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.
வால்நட்ஸில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம் எலும்புகளுக்கு வலிமையை கொடுத்து உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலில் இருக்கும் நச்சு தன்மையை அழிக்க வல்லது.
மூளைக்கு நல்ல செயல் திறனை கொடுத்து சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும். புற்று நோயால் பாதிக்க பட்ட பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றே வால்நட்ஸ்.
கெட்ட கொழுப்புகளை கரைத்து, ரத்தத்தையும் சுத்திகரித்து சிறப்பாக செயல் பட செய்து இதயத்தை பாதுகாத்து கொள்கிறது.