முடக்கத்தான் கீரை கேள்விப்பட்டிருப்பீர்கள் அதன் பயன்கள் தெரியுமா?

கீரைகளில் இருக்கும் வைட்டமின் எ, வைட்டமின் பி, வைட்டமின் சி கண்களுக்கு தெளிவான பார்வை திறனை கொடுக்கும் மற்றும் உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிடுவது போலவே அதனை கொண்டு உணவுகள் செய்து சாப்பிடலாம். தினம் கீரையை சாப்பிட விரும்பாதவர்கள் இப்படி சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரையை தினம் உணவில் சேர்த்து சாப்பிடு வர கண்கள் ஆரோக்கியம் பெறுவதோடு மட்டுமல்லாமல் முடக்கு வாதம் ஏற்படாமலும் மற்றும் நரம்புகளுக்கு எவ்வித பாதிப்புகளும் வராமல் நரம்பு தளர்ச்சியில் இருந்து காக்கும் வல்லமை கொண்டது.
வயதானவர்களுக்கு ஏற்படும் கை வலி, கால் வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்ற அனைத்திற்கும் அவர்கள் வாரத்திற்கு இருமுறையாவது உணவில் முடக்கத்தான் கீரையை எடுத்து கொள்ளலாம்.
இதில் இருக்கும் கசப்பு சுவை உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும். இதனை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக குடிப்பதன் மூலம் கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
இந்த கீரையில் இருக்கும் வைட்டமின்கள் உடலுக்கு ஊட்ட சத்துக்களை கொடுத்து நல்ல மன நிலையை கொடுக்கும்.