புரோக்கோலி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
Fri, 1 Sep 2017

முட்டை கோஸ் போலவே காட்சி தரும் இந்த புரோக்கோலி நமக்கு நன்மை தர கூடியதே.
புரோகோலியின் பயன்கள் :
- உடலில் புற்று நோயை ஏற்படுத்தும் அணுக்களை அழித்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை அடங்கி உள்ள இதை நம் இதயத்தில் ஏற்படும் கோளாறுகள் அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் பண்பு கொண்டது.
- குடல்களில் ஏற்படும் தொற்றுகளிடம் இருந்து நம்மை பராமரிக்கும் புரோகோலியை சமைத்து சாப்பிடுங்கள்.
இதில் இருக்கும் கால்சியம் மற்றும் நார் சத்து அனைத்தும் வலிமையான எலும்புகளை கொடுக்கிறது.
உடலில் சுரக்கும் சுரப்பிகளுக்கு நல்ல போஷாக்கை கொடுத்து நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து ஆண்டி ஆக்ஸிடண்டுகளை ஊக்குவிக்கிறது.
- இன்று மக்களை அதிகம் பாதிக்கும் மாரடைப்புக்கு புரோகோலியை உங்கள் உணவில் தினம் சேர்த்து கொள்ள அதில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் நன்மை பயக்கும்.