லஸ்ஸி குடிச்சிருக்கீங்களா? அதனால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் தெரியுமா?

லஸ்ஸி என்பது என்னெவென்றே சிலருக்கு தெரியாது, நமது அன்றாட உணவில் தினம் பயன்படும் தயிரில் இருந்து தயாரிப்பதும், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதும் தான் இந்த லஸ்ஸி.
பாக்டீரியாக்களை அழிக்கும் :
உடலில் நச்சு தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து பாதுகாக்கிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நோய் தொற்றுகளிடம் இருந்து பராமரிக்கிறது. பாக்டீரியாக்கள் நமக்கு தீமையை தருவது போலவே நன்மையை தரும் பாக்டீரியாக்களும் உள்ளன. இதனை அதிகரித்து ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
கால்சியம் :
எலும்புகளின் வலிமைக்கு பயன்படும் கால்சியம் இருக்கிறது. மூட்டு வலிகளுக்கும் மற்றும் பற்களின் உறுதிக்கும், பற்களில் ஏற்படும் குறைபாடுகளையும் வராமல் தடுக்கும்.
புரோடீன்கள் இருக்கும் லஸ்ஸி :
லஸ்ஸி குளிர்ச்சியை கொண்டதால் கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்திற்கு இதனை அருந்த நல்ல குளிர்ச்சியை கொடுக்கும். தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை போக்கவும் மற்றும் தசைகளின் உறுதிக்கும் மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
சூரியனின் வெப்பத்தினால் உடலில் உருவாகும் வியர்வையால் உண்டாகும் வியர்குருவை போக்கவும் லஸ்ஸி மிகவும் பயன்படும். குடித்து வர வியர்க்குரு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் கோளாறுகளுக்கு தினம் அருந்தி வரலாம் மற்றும் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், காந்தல் தன்மையை போக்கவும் லஸ்ஸியை பயன்படுத்துங்கள்.
என்சைம் :
செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை அதிகரித்து உணவுகளை விரைவில் செரிக்க செய்யும். அசைவ உணவுகளை உண்ட பின்னர் ஒரு கிளாஸ் லஸ்ஸி குடிக்க செரிமானத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.
வைட்டமின் பி 12 :
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து. சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும் மற்றும் ஆரோக்கிய குளிர் பானமாகவும் இருக்கிறது. நல்ல உடல் சக்தியை கொடுத்து சிறப்பாக இயங்க செய்யும்.