பச்சை பட்டாணியில் இருக்கும் மருத்துவம்!

பச்சை பட்டாணியில் இருக்கும் வைட்டமின் பி நம் உடலில் இருக்கும் செரிமான உறுப்புகளை வலு பெற செய்து செரிமானத்தை நன்கு நடை பெற செய்யும்.
இதில் அடங்கி உள்ள வைட்டமின் எ, வைட்டமின் பி, வைட்டமின் சி எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் வாயில், நாக்கில் புண்கள் இருந்தால் அதை குண படுத்தவும் பயன்படுகிறது.
மூளை வளர்ச்சிக்கும் மற்றும் அதனை சுறு சுறுப்புடன் இயங்க செய்யவும் பயன்படும் பட்டாணி, நுரையீரலில் ஏற்படும் கோளாறுகளுக்கும் நல்லதொரு மருந்தாகவே இருக்கிறது.
மன நிலை சரி இல்லாத நிலையில் உள்ளவர்கள் பட்டாணியை தோலை நீக்கலாம் சாப்பிடலாம் . இதில் இருக்கும் பாஸ்பரஸ் உங்கள் மன நலத்தை குணமடைய செய்யும்.
இதில் இருக்கும் மாவு சத்து, புரத சத்து, நார் சத்து நம்மை இளமையுடன் வைத்து கொள்ள உதவுகிறது.
இதை தோல் நீக்காமல் சாப்பிட எல்லா நன்மைகளும் கிடைக்கும். இதில் இருக்கும் கொழுப்புகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து பொலிவான தோற்றத்தை தர கூடியது.