ஆரோக்கியத்தை கொடுக்கும் பச்சை பயறு!!
Sep 3, 2017, 19:40 IST

பச்சை பயறில் இரும்பு சத்துக்கள், நார் சத்துக்கள், புரத சத்துக்கள் என அனைத்தும் அடங்கும்.
பச்சை பயறு :
பச்சை பயறை கொண்டு குருமா செய்து சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு சேர்த்து சாப்பிட உடல் எடை குறைக்கும் உணவாக கருத படுகிறது.
சத்துக்கள் உள்ள இப்பயறை சாப்பிட முடி உதிர்வு, முடி வளர்ச்சி போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கும்.
பச்சை பயறை வேக வைத்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினம் சாப்பிட ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- புரோட்டின் சத்துக்களை அதிகம் கொண்ட பயறை தினம் சாப்பிட உடலில் இருக்கும் அதிகமான வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும்.
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் என்ற பெயரில் கொடுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்களை கொடுக்காமல் பயறு வகைகளை கொடுங்கள். - தோல் புற்று நோய் மற்றும் தோலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் பச்சை பயறு உதவும்.
ரத்த சோகையை குண படுத்தும் இரும்பு சத்துக்கள் பச்சை பயறில் அதிகம் காண படுகிறது.