கொய்யா பழத்தின் மகத்துவம் அதிகமே!

பார்ப்பதற்கே அழகான தோற்றம் கொண்ட கொய்யா கனியில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
கொய்யாவின் உள்ளிருக்கும் சதை பற்றை மட்டும் சாப்பிடாமல், வெளியில் இருக்கும் தோலையும் சேர்த்து சாப்பிட்டதால் தான் அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு முழுமையாக சேரும்.
எலும்புகளுக்கு வலு ஊட்டவும் ,உடல் சோர்வை நீக்கவும், குழந்தைகளுக்கு ஊட்ட சத்து கொடுக்கவும் ஏற்றது தான் கொய்யா பழம்.
முகம் வறண்ட நிலையில் காணப்படுபவர்கள் கொய்யா கனியை தினம் ஒன்று சாப்பிடு வர முகம் அழகு பெறுவதோடு, இளமையான தோற்றத்தையும் தரும் மருத்துவம் கொண்டது.
மதுவில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள் தினமும் ஒரு கொய்யா சாப்பிட நல்லது.
பற்களில் வலி ஏற்பட்டால் கொய்யா கனி சாப்பிட அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பற்களில் சிறிது நேரம் வைக்க வலி குறைந்து நிவாரணம் பெறலாம், மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்கும் வல்லமை கொண்டது.
அடி பட்ட இடங்களில் கொய்யாவின் இலையை அரைத்து சாற்றை இடுவதின் மூலம் காயங்கள் விரைவில் ஆறி விடும்.