குளிக்காமலே உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சிறந்த வழிகள்!

குளிக்காமலே உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சிறந்த வழிகள்!

எல்லோருமே மழைக் காலத்தில் குளிக்க விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் வெளியில் புத்துணர்ச்சியாக தோன்ற வேண்டும் என்பதற்காக குளிப்பார்கள். மேலும் தற்போதைய அவசர சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்வோர்கள் கூட குளிக்காமல் செல்ல நினைப்பார்கள. ஆனால், வியர்வை நாற்றம் நாம், குளிக்கவில்லை என்பதை வெளியில் காட்டிவிடும். குளிக்காமலேயே உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

குளிக்காமலே உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சிறந்த வழிகள்:-be

  • அக்குளில் அதிகமாக வியர்வை ஏற்பட்டால் ஹேண்ட் சானிடைசரை அக்குளில் பயன்படுத்தினால் அக்குளில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வியர்வையால் ஏற்படும் நாற்றம் வராது.
  • சிலர் குளித்த பின்னர் தான் டியோடொரண்ட் பவுடரை பயன்படுத்தலாம் என நினைப்பார்கள். ஆனால், இரவு தூங்குவதற்கு முன்னர் இதை பயன்படுத்தினால் காலையில் வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கலாம்.
  • குளிப்பதற்கு நேரம் இல்லாமல் குளிக்காமல் இருக்கும் போது தலையில் உள்ள பிசுபிசுப்பான எண்ணெய் பசையை போக்க குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பவுடரை தலையில் தூவினால் எண்ணெய் பசை நீங்கி, நல்ல மணத்துடனும் இருக்க முடியும்.
  • குளிக்காமலே நம் மீது மணம் வீசு வேண்டுமானால் தலைமுடியின் முனைகளில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஈரமான துடைப்பானை கொண்டு தேய்த்தாலே போதும்.
  • ஆடைகளை அணிவதற்கு முன்னரே நறுமண செண்டுகளை பயன்படுத்துவதால் உடம்பை நாள் முழுவதும் நறுமணமாக வைத்துக் கொள்ளலாம்.
  • எலுமிச்சை மனம் கொண்ட கிரீம்கள் அல்லது பவுடர்களை பயன்படுத்தினால் உடலில் வியர்வை துர்நாற்றமே வராது.
  • குளிக்காமல் இருந்தாலும் புத்துணர்ச்சியோடு இருக்க உடைகளை கட்டாயம் மாற்ற வேண்டும். இப்படி செய்வதால் குளித்தது போல தோற்றத்தை வெளியில் ஏற்படுத்தி கொள்ளலாம்.

 

 

Share this story