Tamil Wealth

முடிகளில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும் திராட்சை !

முடிகளில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும் திராட்சை !

இன்று அனைவருக்கும் முடி உதிர்வு, வளர்ச்சி இன்றி காண படுவது தான் பெரிய பிரச்சனைங்க. என்னதாங்க பண்றது. கவலைய விடுங்க!

செய்முறை :

திராட்சையை சுவைத்த பின் அதன் விதைகளை தூரே வீசுகிறோம், அதில் இருக்கும் நன்மைகள் தெரியாமல் செய்கிறார்கள். திராட்சை விதைகளை சுத்தம் செய்து அரைத்து அதில் இருந்து எண்ணெயை பிரித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்ஸிடண்டுகள் போன்றவை அதிகம் இருப்பதினால் முடிகளில் ஏற்படும் பாதிப்பு அனைத்திற்கும் நல்ல நிவாரணியாக கருத படுகிறது.

எண்ணெயை தலையில் நன்கு தேய்க்க வேண்டும், நுனி வேர்கள் வரை தேய்த்து வர வேண்டும். இது முடிகளில் பராமரிப்பு உதவுகிறது. இது சூரியனின் வெப்பத்தினால் முடிகளில் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது, முடிகளில் ஏற்படும் பிளவுகளை கட்டு படுத்தும் விதமாகவும் பயன்படுகிறது.

முடிகளில் ஏற்படும் பிளவுகளை தடுக்கும் :

முடிகளில் ஏற்பட்டும் பிளவுகளை கட்டுப்படுத்தி புதிய முடிகளை வளர செய்து அடர்த்தியான வளர்ச்சியை கொடுக்கும் மற்றும் தலையில் இருக்கும் பொடுகு தொல்லைகளை நீக்கும், பொடுகுகள் வராமல் தடுக்கும். முடிகளில் திராட்சை விதைகளின் எண்ணெய் தேய்க்க கூந்தலில் எண்ணெய் பசையை ஏற்படுத்தாது.

ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் :

எண்ணெய்களில் அதிகம் காண படும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் முடிகளின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொடுத்து, நீளமான கூந்தலை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

Share this story