சருமத்தை அழகு படுத்த உதவும் திராட்சை பழம்! பிரகாசமான தோற்றத்தை தரும்!

திராட்சை பழம் அனைவருமே சாப்பிடும் ஒன்றே, அதனை கொண்டு நமது சருமத்தை அழகாக மாற்றும் முறைகளை பற்றி பார்க்கலாம்.
சரும பராமரிப்பு :
திராட்சை பழத்தில் இருக்கும் சதை பற்றை மட்டும் சுவைத்து விட்டு அதன் விதைகளை தூரே வீசுகிறோம். அதன் விதைகளில் இருக்கும் சத்துக்கள் நமது ரத்தத்தை சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை சீராக அமைக்கும் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குண படுத்தவும் உதவுகிறது.
திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் :
வைட்டமின் சி
வைட்டமின் இ
மேற்கூறிய வைட்டமின்கள் திராட்சை விதைகளில் காண படுவதால், விதைகளில் இருந்து தயாரிக்க படும் எண்ணெய் முகத்தில் ஏற்படும் வறட்சி, சரும கோளாறுகளுக்கு பயன்படும், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி முகத்தை எப்பொழுது பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது, ஈரப்பதத்தை எப்பொழுதும் தக்க வைத்து கொள்ளவும் பயன்படுகிறது.
சுருக்கங்களை போக்கும் :
திராட்சையை நேரடியாகவே சருமத்திற்கு பயன்படுத்த சுருக்கங்கள் மறையும் மற்றும் பருக்களை போக்கி அதனால் ஏற்படும் தழும்புகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது.
திராட்சையுடன் தேன் :
திராட்சையின் எண்ணெயுடன் தேனை கலந்து சருமத்திற்கு பயன்படுத்த முகம் கூடுதல் அழகை பெரும் மற்றும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும், சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர் ரோஸ் வாட்டர் கொண்டு கழுவ மிருதுவான சருமத்தை கொடுத்து பளிச்சென்று வைத்து கொள்ளும்.
திராட்சையுடன் முல்தானி மட்டி :
திராட்சை எண்ணெயுடன் முல்தானி மெட்டியை கலந்து தினமும் சருமத்திற்கு பயன்படுத்த முகத்திற்கு எவ்வித குறைகளும் வராது மற்றும் எண்ணெய் சருமத்தை கொண்டவர்களுக்கு நல்ல பலனை தரும். நல்ல சிவப்பழகை கொடுக்கும்.
திராட்சை எண்ணெயுடன் கலந்த ரோஸ் வாட்டரை முகத்திற்கு பயன்படுத்திய பின்ன 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து வெறும் நீரினை கொண்டு கழுவ வேண்டும்.