மஞ்சள் பற்கள் வந்துவிட்டதா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

சிரிக்கும் பொழுது பற்களில் இருக்கும் கறைகள், மஞ்சள் தோற்றம் நமது அழகையே பாதிக்கும். மற்றவர்களுடன் பேசும் பொழுதும் அவர்களின் எண்ணத்தை மாற்றும். நாம் உண்ணும் உணவின் மூலமும் பற்களில் இருக்கும் கறைகளும் பற்களின் தோற்றத்தை கெடுத்து, பற்களுக்கு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும்.
பற்களுக்கு தேவையான வைட்டமின்கள் :
பற்களுக்கு தேவை வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழங்களை எடுத்து கொள்ளலாம், ஸ்ட்ராவ் பெர்ரி பழத்தினை நன்கு சுத்தம் செய்து அதனை துண்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த பேஸ்டை தினம் காலை மாலை பற்களில் தேய்க்க வேண்டும். இதனை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பற்களுக்கு பயன்படுத்த கறைகள் அனைத்தும் நீங்கி பற்களை வெண்மை நிறமாக மாற்றும். இதனை பற்களுக்கு பயன்படுத்திய பின்னர் பற்களை துலக்க வேண்டும்.
பற்களுக்கு தேவையான கால்சியம் :
பழங்களில் கால்சியம் இருக்கும் ஆரஞ்சு பழத்தின் சதை பற்றினை பிழிந்து சாற்றினை எடுத்து கொள்ளுங்கள். சாற்றினை போலவே அதன் தோல்களையும் கொண்டு பற்களை சுத்தம் செய்ய மஞ்சளை கறைகள் நீங்கி பற்களை பளிச்சென்று வைத்து கொள்ளும். வைட்டமின் சி-யும் இருப்பதால் பற்களில் படியும் கறைகளையும் நீக்கி பற்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உகந்தது.
உப்பை பயன்படுத்தி பாருங்கள் :
விளம்பரங்களில் கேட்க படும் உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா என்று! நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பை கலந்து பற்களை துலக்க பற்கள் வெண்மை நிறத்தில் மாறி அழகான பற்களை கொடுக்கும்.
எலும்பிச்சை சாறு :
எலும்பிச்சையின் சாற்றினை பற்களில் தேய்க்கலாம் மற்றும் அதன் தோல்களை கொண்டும் பற்களில் தேய்க்க நல்ல பலனை கொடுக்கும். இதனுடன் சிறிதளவு உப்பையும் கலந்து பயன்படுத்த பற்களில் இருக்கும் உணவுகள் நீங்கும் மற்றும் நோய் தொற்றுகளிடம் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.