Tamil Wealth

பண்ணைக்கீரை ஊட்ட சத்துக்களை கொடுக்கும்!

பண்ணைக்கீரை ஊட்ட சத்துக்களை கொடுக்கும்!

பண்ணைக்கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நமது உடலில் ஏற்படும் சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பண்பு கொண்டது.
பண்ணைக்கீரையை சமைத்து சாப்பிட நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது மற்றும் அதனுடன் மிளகு, இஞ்சி சாறு, புதினா, உப்பு என அனைத்தும் சேர்த்து சாப்பிட பல வித நோய்களில் இருந்து விடுபடலாம்.

கை, கால்களில் ஏற்படும் ரத்த கசிவுகள், பிளவுகள், வெடிப்புகள் போன்றவற்றிக்கு இதன் இலைகளின் சாற்றினை பயன்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் வருவதை காணலாம்.
சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் பண்ணைக்கீரையின் இலைகளில் இருந்து சாற்றை பிரித்து எடுத்து அதனை முகத்தில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கு மற்றும் பருக்கள், தழும்புகள் மறைய பயன்படுத்தலாம்.

ரத்த கசிவுகளால் நுண்கிருமிகள் உடலில் சேர்வதை தடுத்து பராமரிக்கிறது.

வைட்டமின் குறைபாடுகளால் வர கூடிய வயிற்று கோளாறுகள் மற்றும் பலவீனமான எலும்புகள் அதனால் உருவாகும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலிகள் என அனைத்து வலிகளையும் போக்கும் வல்லமை கொண்டதே இந்த பண்ணைக்கீரை.

Share this story