Tamil Wealth

உடல் எடையினைக் குறைக்கும் தன்மை கொண்டதா நெய்?

உடல் எடையினைக் குறைக்கும் தன்மை கொண்டதா நெய்?

நெய் உடல் எடையினைக் குறைக்கும் என்று பலரும் கூறக் கேட்டு இருப்பீர்கள். உடல் எடையினை உண்மையில் நெய் கூட்டுமா? என்பது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

நெய்யிலும் எண்ணெயில் உள்ளதுபோல் கொழுப்பு உள்ளது, ஆனால் அந்தக் கொழுப்பானது நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகும்.

அதாவது நெய்யில் உள்ள பிட்யூட்ரிக் அமிலம் மற்றும் டிரைகிளிசரைடுகள் உடலில் நல்ல கொழுப்புகளை சேர்ப்பதோடு கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் செய்யும் தன்மை கொண்டது என்பது ஏற்கனவே அறிவியலார்கள் ஆராய்ந்து சொன்ன உண்மைகளாகும்.

மேலும் நெய் உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் அமினோ அமிலங்களைக் கொண்டதாக உள்ளது. மேலும் நெய்யில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் சீரான அளவில் நல்ல கொழுப்பினை சேர்க்கின்றன.

நெய்யினை வறட்சியான சுருள் தன்மை கொண்ட தலைமுடி கொண்டோருக்கு சிறந்த கண்டிஷனராகவும் செயல்பட்டு வழுவழுப்பாக முடியினை மாற்றக் கூடியதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெய்யினை சாதத்துடன் கலந்தும் உண்ணச் செய்யலாம், அதேபோல் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் நெய்யைக் கலந்து குடித்தால் உடல் எடை விறுவிறுவென குறையும் என்பது ஆயுர்வேதத்திலேயே குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்களாகும்.

Share this story