லிச்சி பழம் தெரியாதா தெரிந்துகொள்ளுங்கள் !!!

லிச்சி பழம் தெரியாதா தெரிந்துகொள்ளுங்கள் !!!

அதிக நீர் சத்தை கொண்ட லிச்சி பழத்தை கோடைகாலங்களில் அதிகம் உட்கொள்ளலாம்.  அதே போல் இதில் அதிகம் இருக்கும் நார் சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கலோரிகளை கரைத்து , உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை தரும்.  ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொண்டுள்ள லிச்சி பழம் புற்று நோய் வராமல் தற்காத்து கொள்கிறது முக்கியமாக பெண்களுக்கு நல்லது. பைட்டோ-கெமிக்கல்கள் உள்ள இப்பழம் கண்களில் ஏற்பட கூடிய வலிகள், தொற்றுகள், புரை, கண்கள் மங்கிய நிலை, பார்வை கோளாறுகள் அனைத்துக்கும் சிறந்த மருந்து.

இதில் இருக்கும் வைட்டமின் சி ரத்தத்தை சுத்திகரித்து , ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்து சீரான இதய செயல்பாடுகளை கொடுக்கும்.  இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து செயல் பட செய்கிறது.

ரத்தத்திற்கு தேவையான இரும்பு சத்தை கொடுத்து ரத்தத்தில் ஏற்படும் சோகை வராமல் தற்காத்து கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்து உடலை பேணி பாதுகாக்கும். வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை தீர்த்து சிறப்பான செரிமானத்தை நடை பெற செய்யும்.

Share this story