கரிசலாங்கண்ணி கீரையின் மகத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்!!

கரிசலாங்கண்ணி கீரையை நாம் தினமும் உணவில் எடுத்து கொள்ள நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.
பல் தேய்க்க பயன்படுத்தும் தூரிகையை தவிர்த்து கரிசலாங்கண்ணி கீரையின் வேரை பயன்படுத்த பற்கள் நல்ல வெண்மை நிறத்தை பெரும்.
கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றினை பிழிந்து எடுத்து கொண்டு அதனை தினம் அருந்த சிறுநீரக கோளாறுகள் நீங்கி சிறுநீர் அடைப்பு ஏற்பட்டாலும் குணம் ஆகும்.
விஷ பூச்சிகளின் கடிகளால் ஏற்படும் கட்டிகளுக்கு மற்றும் சளி, இருமல் ஆகியவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கும்.
அடிக்கடி காது வலிக்கிறதா இதன் சாற்றை ஒரு சொட்டு காதில் விட நல்ல பலனை கொடுக்கும். கண் பார்வையில் கோளாறு இருந்தால் தினம் இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
பசி இன்றி காணப்படுகிறீர்களா இதனை தொடர்ந்து எடுத்து கொள்ள நல்ல பசி எடுத்து சாப்பிடலாம். கல்லீரலில் ஏற்படும் வீக்கங்கள் குறைய இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் உதவுகின்றன.
நினைவாற்றலை இழந்து தவிக்கும் அனைவருக்கும் கரிசலாங்கண்ணி நல்ல ஞாபக திறனை கொடுத்து சிறப்பாக செயல் பட செய்யும்.