Tamil Wealth

அடிக்கடி நகம் உடைகிறதா! கவலை வேண்டாம் அதற்கான சில வழிமுறைகள் பார்க்கலாம்!

அடிக்கடி நகம் உடைகிறதா! கவலை வேண்டாம் அதற்கான சில வழிமுறைகள் பார்க்கலாம்!

நகங்கள் உடைவதற்கு அதிக காரணம் நம் உணவு பழக்கம் மற்றும் வைட்டமின்கள் குறைபாடுகளே.

உபயோகிக்கும் வேதி பொருட்கள் :

கைகளை கழுவ நாம் உபயோகிக்கும் சோப்பு மற்றும் இதர பொருட்களின் தாக்கத்தினால் நகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். வேதி பொருட்கள் அதிகம் அடங்கினால் சருமத்தில் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

எடுத்து கொள்ளும் உணவுகள் :

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகள் மூலமும் சரும கோளாறுகள் மற்றும் நகங்களில் மாற்றம் ஏற்படும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் தானிய வகைகளை உட்கொள்ளுங்கள் உங்கள் நக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

நகங்களில் எண்ணெய் தடவுதல்:

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதே போலவே கை, கால்களில் இருக்கும் நகங்களுக்கு எண்ணெய் வைக்க வேண்டும். இது அவைகளின் வளர்ச்சிக்கும் மற்றும் அவற்றில் ஏற்படும் குறைக்கும் நல்ல நிவாரணியே. நகங்களுக்கு நல்ல உறுதியை கொடுத்து நகத்தின் பலவீனத்தை குறைத்து வலிமையை கொடுக்கிறது.

விட்டமின் இ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி6 அதிக அளவிலே காண படுவதால் நகங்களில் உறுதிக்கு பயன்படுகிறது. தினம் கைகளை எண்ணெயில் சிறிது நேரங்கள் வைத்து கொள்வதால் நகங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

கைகளை கழுவ வேண்டும் :

கைகளை அடிக்கடி கழுவுங்கள். ஏதேனும் வேலை செய்த பிறகு அல்லது பாத்திரங்களை கழுவுதல் போன்றவற்றால் கைகளில் தொற்றுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க கைகளில் பாதுகாப்புக்கு என உறை அணியலாம் மற்றும் விரல்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

 

Share this story