துணிகள் துவைக்கும் பொழுது கவனிக்க மறந்த செயல்கள்!

துணிகள் துவைக்கும் பொழுது கவனிக்க மறந்த செயல்கள்!

கவனிக்க மறைந்தவை :

  1. எந்த ஒரு துணியையும் துவைக்க ஆரம்பிக்கும் பொழுது கட்டாயம் உள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். அது பணமாக இருந்தால், துவைத்த பிறகு மன உளைச்சல் ஆகும். ஆகையால் துவைக்கும் முன் கட்டாயம் துணிகளுக்குள் ஏதேனும்  இருக்கிறதா என்று பாருங்கள்.
  2. சிலர் துவைக்க விருப்பம் இல்லாமல் துணிகளில் இருக்கும் பட்டன்களை கழட்டாமல் மேலோட்டமாக துவைப்பார்கள், இதில் துவைத்து எந்த பயனும் இல்லை, அழுக்குகள் போகாது மற்றும் அதை அணியும் பொழுது அரிப்புகள் தான் உண்டாகும்.
  3. துணிகளை அதிக நேரம் ஊற வைக்க கூடாது. அது துணிகளுக்கு அரிப்பை ஏற்படுத்தி விரைவில் கிழிந்து விடும்.
  4. துணிகளை சோப்பு கலவையுடன் அதிக நேரம் வைக்க கூடாது.
  5. துணிகளை துவைத்த உடனே காய போட வேண்டும். இல்லையென்றால் அனைத்து துணிகளும் ஒரே இடத்தில் இருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நாற்றங்கள் பரவி ஆடைகள் துர்நாற்றங்களை பெறும் மற்றும் கொசுக்களும் அத்துணிகளில் சென்று அசுத்தத்தை ஏற்படுத்தும்.

Share this story