Tamil Wealth

தலை முடி பிரச்சனைக்கு நீங்கள் எடுத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

தலை முடி பிரச்சனைக்கு நீங்கள் எடுத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

தலை முடி வளர்ச்சிக்கு முக்கிய காரணமே நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு பழக்கமே. அதனை நாம் சரியாக கடைபிடிக்க வில்லை என்றால் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடிகளில் பிளவு போன்றவை ஏற்படும்.

உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்!

விட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைடமின் டி, வைட்டமின் இ இவை அனைத்தும் தேவை நமது தலை முடி பிரச்சனைக்கு இவைகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவுகளிலே இருக்கிறது.

முட்டை கோஸ் :

காய்கறிகளில் முட்டை கோசில் இருக்கும் வைட்டமின்கள் முடி உதிர்வு பிரச்சனைகள நல்ல தீர்வாக அமைகிறது . இதனை சாம்பாரில் சேர்த்து சாப்பிடவோ அல்லது குருமா போல் வைத்து சாப்பிடவும் நல்லதே.

தானியங்கள், பருப்பு வகைகள் :

தானியங்களில் தான் அதிகம் வைட்டமின் சத்துக்கள் இருக்கும். வேர்க்கடலை, பாதம் பருப்பு, பருப்பு வகைகள், முந்திரி போன்ற உணவுகளை தினம் சாப்பிடுங்கள் உங்களுக்கு முடிகளில் பிரச்சனையே வராது.

சூரியனின் தாக்கத்தினால் பாதுக்காக்க வேண்டும் :

சூரியனின் தாக்கத்தினால் தலையில் இருக்கும் முடிகளின் வேர் நுனிகள் அதிக அளவில் பாதிக்க படும். இதனை நிவர்த்தி செய்ய உதவும் வைட்டமின் இ காஸ்மெட்டிக்ஸ் ஐட்டம்ஷில் அதிகம் காண படுவதால் நம்மை பராமரிக்கிறது.

காய்கறிகள் :

காய்கறிகளிலும் அதிகம் வைட்டமின்களை கொண்டவற்றை தினம் சமைத்து உண்ண முடிகளில் ஏற்படும் பிளவுகள் மற்றும் நரை முடி பிரச்சனை வருவது தடுக்கப்பட்டு பாதுகாக்கலாம். வைட்டமின் இ அதிகம் காண படும் காய்கறிகளை, பச்சையாக உண்ண கூடிய காய்கறிகள் தக்காளி, உருளை கிழங்கு சாப்பிட நல்ல பலனை தரும்.

மன நிலை :

நமது மன நிலையை பொறுத்தே தலை முடி பிரச்சனை இருக்கிறது. அதிக மன அழுத்தத்தில் இருந்தால் அது முடி உதிர்வு பிரச்சனை எழ கூடும்.

அசைவ உணவுகள் :

அசைவ உணவுகளில் வைட்டமின் டி அதிகம் இருக்கும் மீனை குழம்பு வைத்து உண்ண வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் நமக்கு கிடைக்கும் மற்றும் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.

Share this story