தசைகளில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க உதவும் உணவுகள்!

தசைகளில் உண்டாகும் பிடிப்புகள், வலிகள் போன்ற கோளாறுகளை போக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள், உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு தசைகளையும் பராமரிக்கும்.
தசை பிடிப்புக்கு காரணமே நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து , பழங்கள், காய்கறிகள், கார்போஹைடிரேட், முழு தானியங்கள், புரதம், பால் பொருட்கள் போன்றவையே. இவை இருக்கும் உணவுகளை நாம் எடுத்து கொள்ளும் அளவிலே இருக்கிறது நமது ஆரோக்கியமும் மற்றும் உடல் உபாதையும்.
உடலில் இருக்கும் தசைகளை அதிகரித்து பெற செய்ய மற்றும் உறுதியாக மாற்ற உதவும் சில உணவுகளை பற்றி பார்க்கலாம்!
காலை உணவை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள், இதில் பழம், பால் போன்றவை இருந்தால் மிகவும் நல்லது.
நீங்கள் எடுத்து கொள்ளும் நொறுக்கு தீனிகளை தவிர்த்து தானிய உணவுகளையும், பழங்களையும், அசைவ உணவில் கேடு விளைவிக்காத சால்மன் மீன் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
காய்கறிகளில் பட்டாணி, காலிப்ளவர் , பூசணிக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவைகளில் ஸ்டார்ச் இருக்கும், ஆகவே இவைகளை அதிகம் உட்கொள்வதால் தசைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
கார்போஹைடிரேட் இருக்கும் உணவுகளையும் எடுத்து கொள்ள நல்ல ஆரோக்கியம்.
உடற்பயிற்சி :
எந்த உணவுகளை எடுத்து கொண்டாலும் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் நமது தசைகளை உறுதி பெற செய்யும், உதாரணத்திற்கு பளு தூக்குதல் நல்லது. உங்கள் தசைகளுக்கு வலிமையை கொடுக்கும்.
தயிருடன் கோதுமை உணவுகளை கலந்து சாப்பிட பசி தீரும் மற்றும் உடல் உறுதி பெறும்.
சாதம் மற்றும் இதர உணவுகளில் தயிர். மோர் போன்றவை கலந்து உண்ண ஆரோக்கியம் மற்றும் எடை அதிகரித்து நல்ல வலு பெறலாம்.