Tamil Wealth

எலும்புகளை உறுதிபடுத்த உதவும் உணவுகள் !

எலும்புகளை உறுதிபடுத்த உதவும் உணவுகள் !

இன்று சிறு வயதிலே அனைவரும் எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலிகள் உருவாகின்றன. அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்காததே காரணம்.

உணவுகள்

ஆரஞ்சு :

பழங்களில் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் விட்டமின் சி மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலில் இருக்கும் நச்சு தன்மையை அழிக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அதோடு எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்சியம் சத்துக்களை கொடுத்து உறுதியை கொடுக்கிறது.

சோயா :

சோயாவை வேக வைத்து சமையலில் சேர்த்து கொண்டு சாப்பிட 261 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இதனால் எலும்புகள் நல்ல வலு பெறும் மற்றும் ப்ரோட்டின் சத்துக்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக கருத படுகிறது, இதில் மேலும் அடங்கி இருக்கும் சத்துக்கள் பின்வருமாறு .

மக்னீசியம்
ப்ரோட்டீன்
செலினியம்

இவைகளும் நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு கொண்டு உள்ளது.

எலும்புகளில் ஏற்படும் பாதிப்பு :

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியம் தான் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு காரணம், சரியான அளவில் எடுத்து கொள்ள வேண்டும். பற்களுக்கு தேவையான கால்சியத்தை அதே எடுத்து கொள்ளும்.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலியில் இருக்கும் சத்துக்கள்

விட்டமின் சி
விட்டமின் கே
கால்சியம்

இவைகள் நம் எலும்புகளில் வலிமைக்கும் மற்றும் ரத்தத்தில் இருக்கும் செல்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது. நமது உடல் வளர்ச்சிக்கும் மிகவும் பயன் உள்ளது.

பீன்ஸ் :

நல்ல சுவை கொண்ட வெள்ளை பீன்ஸ்களை சமைத்து சாப்பிட உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும், ஆகவே பீன்ஸ் அதிகம் சாப்பிடுவதில் எவ்வித ஐயமுமில்லை.

பாதாம் பருப்பு :

பாதாம் பருப்பில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் பற்களின் வலிமைக்கும் மற்றும் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தை குண படுத்தவும் உதவுகிறது.

Share this story