ஆரோக்கியமுடன் வாழ உண்ண வேண்டிய உணவுகள்!

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளிலும் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியமே நம் உடலை பராமரிக்கிறது.
இனிப்பு சுவை உள்ள உணவுகள் அல்லது ஸ்னாக்ஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
அதிகம் எண்ணெய் உபயோகித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்த்து குறைந்த அளவில் உண்ண வேண்டும்.
புரதம், நார் சத்துக்கள், வைட்டமின்கள், நீர் சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு தேவையானதே. எந்த உணவையும் அதிகம் எடுத்து கொள்ள கூடாது அளவான முறையில் எடுத்து கொள்ள ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
உடற்பயிற்சி என்பதும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடல் தசைகள், எலும்புகளின் அசைவுகள் முக்கியம்.
குளிர்பானங்கள் அதிகம் குடிப்பதை நிறுத்தி இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை குடிக்கலாம்.
உணவுகளை எடுத்து கொள்வதை போலவே நிறைய பழ வகைகளையும் தினம் எடுத்து கொள்ள அதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் நமக்கு ஆரோக்கியம் தர கூடியதே.