விளையாட்டு வீரர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்!

விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் மற்றும் அதிக ஆரோக்கியத்துடன் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு அவர்கள் கடைபிடிக்கும் உணவுகளை காணலாம்.
விளையாட்டு வீரர்கள் :
தினமும் காலை நடைபயிற்சி , உடபிற்பயிற்சியை மேற்கொள்வார்கள். இதனால் அவர்களின் உடலில் இருந்து அதிக கொழுப்புகள் மற்றும் வியர்வையின் மூலம் கெட்ட நீர்கள் வெளியேற்ற படும்.
உண்ண வேண்டிய அசைவ உணவுகள் :
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இருக்கும் சால்மன் மீன்கள் விளையாட்டு வீரக்ளுக்கு மிகவும் நல்லதொரு அசைவ உணவாக கருத படுகிறது. முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை சாப்பிட அவர்களுக்கு உடல் உறுதியை கொடுத்து எலும்புகளையும் பல படுத்தும் ஆற்றல் கொண்டது. ஓட்டப்பயிற்சியை மேகொள்பவர்களுக்கு கோழி கறி மிக நல்லது, அவர்கள் நீண்ட நேரம் ஓடுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. ஓடுவதற்கு தயாராக இருப்பவர்கள் காலை உணவாக எடுத்து கொள்ள நல்லது.
பழ வகைகள் :
ஆரஞ்சு
ஆப்பிள்
ப்ளாக்பெர்ரி
நாரத்தம்பழம்
வாழை பழம்
மேற்கூறிய பழங்கள் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் உள்ளது. வைட்டமின்கள் அதிகம் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமானது உடற்பயிற்சி.
பருப்பு வகைகள் :
வீரர்கள் பாதம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற ஆரோக்கியம் உள்ள தானிய வகைகளையே உண்ண வேண்டும். புரதம், கார்போஹைடிரேட், நார்ச்சத்து இருக்கும் உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டும்.
கெட்ட கொழுப்புகளை கரைக்கும் உணவுகளையே அதிகம் சாப்பிட, உடலில் இருக்கும் கொழுப்புகள் நீங்கி எப்பொழுதும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள உதவும்.