குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் உடற்பயிற்சி!!

உடற்பயிற்சி:
குழந்தைகளுக்கு சிறு வயதிலே உடற்பயிற்சியை செய்ய பழகுங்கள். அதே போல் அவர்களை நன்கு ஓடி ஆடி விளையாட சொல்ல வேண்டும் அது அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவே கருதப்படும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் உற்சாக படுத்த வேண்டும்.
குழந்தைகள் நன்கு கை, கால்களை அசைப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக அமையும்.
உணவு:
அவர்கள் பள்ளி சென்று வந்த பிறகு கொடுக்கும் ஸ்னாக்ஸ் வகைகளில் நன்கு முளை கட்டிய பயிர் வகைகள் மற்றும் ஜூஸ் கொடுப்பதன் மூலம் நல்ல போஷாக்கை பெறுவார்கள்.
குழந்தைகளுக்கு நல்ல உடல் வாகு வர வேண்டும் என்றால் சத்தான பயிர் வகைகள், காய்கறிகள் உண்ண வேண்டும். அவர்களை பச்சை காய்கறிகளையும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அது அவர்களுக்கு நல்ல ஊட்ட சத்துக்களை கொடுக்கும்.
நீர் ஆகாரங்களில் குளிர்பானங்களை கொடுக்காமல் இளநீர் மற்றும் பழ ரசம், ஜூஸ் கொடுக்க ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இவை குழந்தைகளுக்கு சிறு வயதிலே எவ்வித தொற்றுகளும் ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.