ஆவாரை பூ கொடுக்கும் மருத்துவம்!
Sep 4, 2017, 09:35 IST

சிறிய அளவில் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆவாரை பூவின் மருத்துவ குணங்கள் பார்க்கலாம்.
ஆவாரையின் மருத்துவ குணம் :
ஆவாரை இலையை அரைத்து அதனுடன் கடலை மாவு, மஞ்சள் அல்லது பாசி பயறு கலந்து உடலில் அரிப்பு, தழும்புகள் ஏற்படும் இடங்களில் தேய்த்து வர நல்ல பலனை காணலாம். கடலை மாவு மற்றும் மஞ்சள் சேர்ப்பதால் மேனி அழகு பெரும்.
சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் நீங்க மற்றும் சிறுநீரக எரிச்சல் போன்றவை குணம் அடைய செய்யும் ஆற்றல் கொண்டதே இந்த ஆவாரை பூ.
சூரியனின் அதிகமான வெப்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது இதில் அடங்கி இருக்கும் மருத்துவ நிறமிகள்.
- கால்களில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் தழும்புகள், எரிச்சல் போக ஆவாரையை பயன்படுத்தலாம்.
- மேக நோய்களை குண படுத்தும் விதமாக பயன்படுவதில் ஆவாரை பூ பெரும் பங்கு வகிக்கிறது. நீரழிவு நோயில் இருந்து விடு படவும் இந்த பூ உதவுகிறது.