அதிக பருமன் இருந்தாலும் நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் தெரிஞ்சிக்கோங்க!

எடையை குறைக்கனும் என்று சில சாப்பிடாமலே இருப்பார்கள். அதனை தவிர்த்து நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.
தானிய வகைகள் :
உடல் பருமன் அதிகரித்து விடும் என்ற பயத்தில் சிலர் எதனையும் சாப்பிடாமல் இருப்பார்கள். தானிய வகைகளை சாப்பிட உடல் எடையை கூடாது. ஆகவே முந்திரி, பிஸ்தா, நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட அதிக பசி எடுக்காது மற்றும் இதிலும் அதிகம் காரம், உப்பு, ஆர்கானிக் இல்லாத உணவு பொருட்களையே உட்கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் :
உடல் பருமனை குறைய வேண்டும் என்றால் எண்ணெய் பயன்படுத்திய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த ஆரோக்கியத்திற்கு நல்லதே. உடலில் கொழுப்புகளை சேர்க்காது. பசியை தூண்டாமல் போதுமான அளவுக்கு உணவை எடுத்து கொள்ள உதவும்.
அசைவ உணவு :
அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருக்க முடியாது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முடிவு வந்த பின்னர் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும், அவர்களுக்கு மிக சிறந்த ருசி கொண்ட உணவாகத்தான் மீன் உள்ளது. அதிலும் சால்மன் மீன் தான் எடையை குறைப்பதில் பயன் அளிக்க கூடியது.
உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும் ஒமேகா 3 கொழுப்பு சால்மன் மீனில் இருப்பதால், இதை சாப்பிடுவதால் உடலில் புரோட்டின் அதிகரித்து பசியை கட்டுப்படுத்தும் மற்றும் மீனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து குழம்பு வைத்தே சாப்பிட வேண்டும்.
சர்க்கரையை கட்டுப்படுத்தும் :
உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டு படுத்தி, உடல் எடையையும் குறைக்க உதவும் பழம் தான் அவோகேடா. இதில் இருக்கும் சத்துக்களை கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.