பிரசவத்திற்கு பின் நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

தாய்மார்கள் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உண்ண வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு உண்ணுங்கள். அதுதான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உணவுகளை பற்றி பார்க்கலாம் :
உடலுக்கு ஊட்ட சத்துக்களை கொடுக்கும் தானிய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
கோதுமை
பிரவுன் அரிசி
பார்லி
மேற்கூறியவை போன்ற தானிய உணவுகளையே அதிகம் எடுத்து கொள்ள வேண்டும், உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் சோர்வையும் போக்கும் ஆற்றல் கொண்டது. பிரசவத்திற்கு பின் உடல் எடையை அதிகரிக்கும் இதனை கட்டுப்படுத்த நார்சத்துகள் அதிகம் இருக்கும் உணவுகளையே சாப்பிடுங்கள்.
கால்சியம் சத்துக்களை உட்கொள்ளுங்கள் :
நீர்ம பானங்கள் அருந்த வேண்டும் என்று நினைத்தால் கால்சியம் சத்துக்கள் அதிகம் அடங்கி இருக்கும் தயிர், மோர், கேப்பை மாவு போன்றவற்றை கூல் செய்து குடிக்க மிக்க ஆரோக்கியமே.
அசைவ உணவுகள் :
உடலுக்கு தேவையான புரோடீன்கள், பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் மீன் குழம்பு போன்றவற்றில் அதிகம் இருக்கிறது. அவர்களின் உடல் சோர்வை போக்க தினம் புரோடீன்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
எடையை கட்டு படுத்துங்கள் :
பிரசவத்தின் பின்னர் எடை அதிகரிக்கும். அதனை கட்டு படுத்த வேண்டுமா! உணவுகளில் பயன்படும் எண்ணெய்க்கு பதிலுக்காக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம் மற்றும் அதிக கொழுப்புகள் இருக்கும் உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
சர்க்கரையின் அளவையும் கண்காணிக்க வேண்டும் :
உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். தினமும் உடலுக்கு தேவையான கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்து கொள்ள உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆரோக்கிய உணவுகள் :
அதிக ஊட்ட சத்துக்களை கொண்டு உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுங்கள். இது உங்கள் எலும்புகளை உறுதியாக்கும் மற்றும் உடல் உறுதியை கொடுத்து ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.