Tamil Wealth

முகத்தில் பருக்கள் வர காரணத்தை தெரிந்து கொண்டு அதை தவிர்த்து விடுங்கள்!

முகத்தில் பருக்கள் வர காரணத்தை தெரிந்து கொண்டு அதை தவிர்த்து விடுங்கள்!

பருக்கள் நம் முக தோற்றத்தை மாற்றும் மற்றும் அதனால் முகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பரு அழகையே கெடுத்து விடும். இது வருவதற்கு காரணம் நாம் செய்யும் சில செயல்களே.

காரணத்தை தெரிந்து பின்பற்றுங்கள் :

தலையில் ஏற்படும் அரிப்புகள் மூலம் உதிரும் பொடுகு தொல்லையால் முகத்தில் பருக்கள் மற்றும் சில பாதிப்புகள் உண்டாகும். அதனால் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தலையில் புண்கள் வருவது தடுக்கப்பட்டு சருமத்தையும் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் தலை முடியை நன்கு பராமரிக்க வேண்டும். தலையில் இருக்கும் அழுக்குகள் முகத்தில் சேர்வதால் சரும கோளாறுகள் வர கூடும் மற்றும் தலையில் இருக்கும் எண்ணெய் கசடுகள் முகத்தில் பட அழுக்குகள் முகத்தில் சேர்ந்து அரிப்புக்களை ஏற்படுத்தி முக புண்கள் உருவாகும்.

மன நிலையை பொறுத்ததே !

நம் மன நிலையை பொறுத்தே நம் முகம் வெளிப்படும். அதேப்போல் பருக்கள் வருவதும் நாம் யோசிக்கும் மற்றும் கவலை படும் மன நிலையை பொறுத்தே அமைகிறது.

சரியான உணவு பழக்கம் இல்லாதது :

நாம் உட்கொள்ளும் உணவுகளை பொறுத்தே நம் ஆரோக்கியமும் மற்றும் சரும பராமரிப்பும் இருக்கிறது. அதிகம் எண்ணெயில் உருவான பொருட்களை அதிகம் உண்பதால் முகத்தில் பருக்கள் வரும் மற்றும் சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.

முகத்திற்கு உபயோகிக்கும் பொருட்கள் :

முகத்திற்கு அழகை கொடுக்கும் வகையில் பயன்படுத்தும் வேதி பொருட்களின் ஒவ்வாமையினால் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகும் அதனால் உருவாகும் ஒரு வித பாதிப்பே பருக்கள் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் ஷாம்பு போன்ற பொருட்களின் அலற்சியால் கூட முகத்தில் பருக்கள் வர கூடும். உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சியை பொறுத்து கூட முகத்தில் மாற்றங்கள் வரும்.

நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் மற்றும் விற்பனை ஆகும் வேதி பொருட்களை அதிகம் பயன்படுத்துவதை தவித்து விடுங்கள்.

 

Share this story