குதிங்காலில் ஏற்படும் கோளாறுகளுக்கு உகந்த தீர்வை பற்றி காணலாம்!

நம் கால்களால் ஏற்படும் பாதிப்புகளால் நாம் மிகவும் அவஸ்தைக்கு உள்ளாகுகிறோம். பாதத்தில் ஏற்படும் பாதிப்புகள் நம்மை நடக்க முடியாத நிலைக்கு தள்ளி விடும். சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு காலில் சிறு காயம் ஏற்பட்டாலும் சரியான கவனிப்பு முறை இல்லையென்றால் காலையே இழக்கும் அபாயம் ஏற்படும். ஆகவே கால்களின் பாதத்தில் ஏற்படும் கோளாறுகளை சாதாரணமாக நினைக்க கூடாது.
எண்ணெய் பயன்படுத்துவது :
உடலில் நீர் சத்துக்கள் இல்லாமல் இருப்பதே, காலில் ஏற்படும் வறட்சி தன்மைக்கு காரணம். தினமும் காலை கால்களில் தேங்காய் எண்ணெயை கொண்டு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பாதம் மற்றும் நகங்களிலும் பயன்படுத்துங்கள் . இது உங்கள் பாதங்களை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. நோய் தொற்றுகள் அவ்வளவு எளிதில் ஏற்படாது. குளித்து முடித்தவுடன் கை, கால்களுக்கு எண்ணெய் தடவுவதை பழக்க படுத்தி கொள்ளுங்கள். லினோலிக் அமிலம், லாரிக் அமிலம் போன்றவை எண்ணெய்களில் காண படுவதால் புண்களை விரைவில் குண படுத்தவும், சிறு சிறு நுண்கிருமிகளை கூட நம்மை அண்டாமல் பாதுகாத்து கொள்கிறது.
தொற்றுகள் :
பாதத்தை நாம் சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால் காலில் சொறி, சிரங்குகள், பிளவுகள் ரத்த கசிவுகள் போன்றவை ஏற்பட்டு மற்ற இடங்களுக்கும் பரவி பெரிய சிக்கலை ஏற்படுத்து விடும். சிறு காயம் என்று அலர்ச்சியமாக விட்டு விட வேண்டாம்.
தவிர்க்க வேண்டியவை :
- கால்களை அழகாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக வேதி பொருட்களின் மூல உருவான பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
- சோப்பு, பாதங்களில் உபயோகிக்கும் மருந்து பொருட்களை தவிர்ப்பது நல்லது.
- சூடான நீரில் கால்களை அதிக நேரம் வைத்து கொண்டிருக்க கூடாது. இது சருமத்தை கடின தன்மைக்கு மாற்றும். மிருதுவான தன்மை நீங்கி விடும். தோல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- உடலுக்கு தேவையான நீர் சாதுக்களுக்கு உகந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். பாதத்திற்கு நல்ல உறுதி கொடுக்கும் நோய் தொற்றுகளும் வராது.