அலசமைர் பற்றி தெரிய வேண்டிய உண்மைகள்!

வயது முதிர்ந்த பெரியவர்களை தான் அதிகம் பாதிக்கும் இந்த நோயை பற்றி தெரிந்து கொள்ளலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு திடீர் என்று ஏற்படும் மறதி, ஒரு வித சோர்வு நிலையை வைத்தே தெரிந்து கொள்ளலாம் அவர்கள் பாதிக்க பட்டுள்ளார்கள் என்று. தங்கள் அன்றாட செயல்களில் கூட தடுமாற்றங்கள் ஏற்படும் மற்றும் ஞாபக திறனை குறைத்து சிறு சிறு விஷயங்களை கூட மறக்க செய்யும்.
மறதி தான் பெரிய பிரச்சனை :
மறதியை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் சிறு வயதிலே நீங்கள் அதிகம் ஊட்ட சத்துக்கள் இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். தானிய வகைகள், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொண்டால் வருங்காலத்தில் உங்களுக்கு மறதி என்று நோய் அண்டாது.
உடலில் ஏற்படும் நீர் சத்துக்கள் குறைபாடுகளும் மறதியை ஏற்படுத்தும், இதனை சரி செய்ய கருப்பு ஜூஸ் அல்லது பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பானங்களை அருந்தலாம்.
தவிர்க்க வேண்டியவை :
அதிகம் கொழுப்பு சத்துக்களை கொண்ட அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக சூட்டில் இருக்கும் உணவுகளை உட்கொள்ள கூடாது மற்றும் மசாலா பொடிகளில் உருவான உணவுகளையும் தவிர்த்து கொள்ளுங்கள். அதிக புரத சத்துக்கள் இருக்கும் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
அதிகமான கொழுப்புகள் உடலில் சேருவதால், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள், சிறு மறதியால் கூட அலசமைர் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
நியூரான்களின் இழப்பு :
மூளையின் செயல் திறன் குறையும் பொழுது தான் அலசமைர் நோய்க்கு தள்ள படுகிறார்கள். இதனால் பெரியவர்கள் சிறு சிறு செயல்கள் மற்றும் அடிக்கடி செய்ய வேண்டிய செயல்களையே மறக்கிறார்கள்.
சிந்தனை :
அலசமைர் பாதிப்பு உள்ளவர்களால் ஒரு முடிவை எடுக்க முடியாது. எப்பொழுதும் ஒரு வித குழப்பத்தில் காண படுவார்கள். எதை சாப்பிடுகிறோம் என்று கூட கணக்கிட முடியாத நிலைக்கு தள்ள படுவார்கள், ஆகையால் அவர்களை உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும்.