வீட்டில் பயன்படுத்தும் மரத்தாலான பொருட்களை பற்றிய உண்மைகள்!

வீட்டின் சமையல் அறையில் உபயோகிக்கும் மற்ற பாத்திரங்களை தவிர்த்து மரத்தாலான பொருட்களை பயன்படுத்த நல்ல ஆரோக்கியமே.
நீரினை கொதிக்க வைத்து, சூடான நீரில் பாத்திரங்களை அலச அதில் இருக்கும் நுண்கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்த படுத்தும் மற்றும் நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுகாப்பு தரும்.
மர பொருட்களை கொண்டு சமைப்பது சுலபமே அதை விட கஷ்டம் என்று பார்த்தால் அதனை சுத்தம் செய்வது. சோடா அல்லது உப்பை கொண்டு மர பாத்திரங்களை தேய்த்து கழுவ அதில் இருக்கும் அனைத்து அழுக்குகளும் நீங்கும், படிந்திருக்கும் கிருமிகளும் நீங்கி விடும்.
எந்த பாத்திரமாக இருந்தாலும் அதற்கு உபயோகிக்கும் வேதி பொருட்களை (சோப்பு) கொண்டு தேய்த்த உடனே நீரினை கொண்டு கழுவி விட வேண்டும். இல்லையென்றால் சோப்பின் திட்டுகள் அந்த பாத்திரத்தில் தங்கும், அதில் உணவு வைத்து உட்கொள்ளும் பொழுது உணவுடன் சேர்ந்து வாயில் சென்று உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும்.
பாத்திரங்களை அதிக நேரம் நீரில் வைத்து இருக்க கூடாது, அதில் கொசுக்கள் அசுத்தத்தை ஏற்படுத்தும்.