கண் குறைபாடுகளை போக்க உதவும் ஆகாயத்தாமரை!

ஆகாயத்தாமரை எப்பொழுதும் நீரிலே காண படுகிறது. இதனால் நமக்கு பயன் இல்லை என்று நினைக்காதீர்கள். இதன் இலைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு கொடுக்கும் நன்மைகள் ஏராளம்.
கண் குறைபாடு :
கண்களில் ஏற்படும் குறைபாடுகளை போக்க உதவும் ஆகாயத்தாமரை மிகவும் பயன் அளிக்க கூடியது. ஆகாயத்தாமரையின் இலைகளை காய்ச்சி அதனுடன் சந்தனதூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து கொதிக்க விட்டு சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். சூடு தணிந்த பிறகு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தலையில் தேய்த்து வர உடல் சூடு தணிந்து கண் எரிச்சல் குண ஆகும் மற்றும் மூல நோய்களை குண படுத்தவும் நல்லதொரு மருந்தாக பயன்படுகிறது.
சீதபேதி :
சீதபேதியால் பாதிக்க பட்டவர்கள் ஆகாய தாமரையின் இலைகளை அரைத்து அதன் சாற்றுடன் தேன் அல்லது கருப்பட்டி, வெல்லம் கலந்து குடிக்க கிருமிகள் அழிந்து நன்மை பயக்கும்.
காயங்கள் :
தோல் நோய்கள் மற்றும் காயங்களை குண படுத்த ஆகாயத்தாமரையின் இலைகளின் சாற்றினை காயம் இருக்கும் இடத்தில் வைத்து கட்ட வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்த புண்கள் விரைவில் குணம் ஆகும்.
மூல நோய் :
ஆகாயத்தாமரையின் இலைகளின் சாற்றினை பயன்படுத்த மூல நோய்கள் தீரும்.
இனி ஆகாயத்தாமரையை பயன் அற்றது என்று எண்ணாமல் மேற்கூறிய பயன்களை தெரிந்து பயன்படுத்தி பயனை பெறுங்கள்.