எப்பொழுதும் உடல் சோர்வாக இருக்கிறதா? அதை தடுக்க சில வழிகள்!
Feb 8, 2018, 12:00 IST

நம்மில் சிலரை எப்போது பார்த்தாலும் சோர்வாகவோ அல்லது களைப்பாகவோ இருப்பார்கள். அவர்கள் எவ்வளவு தான் ஓய்வு எடுத்தாலும் அது சரியாவதில்லை. அதை சரி செய்து நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க சில வழிகளை இப்போது பார்க்கலாம்.
உடல் சோர்வை தடுக்க வழிகள்:-
- நம்மில் சராசரியாக 90% பேர் விட்டமின் பி – 12 பற்றாக்குறை உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். இந்த வைட்டமின் இறைச்சி, சீஸ் போன்றவற்றில் தான் அதிக அளவில் உள்ளது. எனவே அந்த வகையான உணவை அதிக அளவில் சாப்பிட்டால் போதும்.
- முட்டையில் உள்ள கோலின் எனும் பொருள் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக மாற்ற உதவுகிறது. எனவே தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிட்டால் போதும்.
- தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலும் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் போதும். உடல் சுறுசுறுப்பாக மாறும். வாரத்திற்கு ஒருமுறையாவது அசைவ உணவினை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக மீன், மட்டன் போன்றவற்றை எடுத்து கொள்வது நல்லது.
- எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு சரியான அளவு ஓய்வு எடுத்தாலே போதுமானது. உடல் சோர்வு ஏற்படாமல் தடுக்கலாம்.