நம் முன்னோர்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள்! எதெல்லாம் தெரியுமா?
Thu, 15 Feb 2018

நம்முடைய முன்னோர்கள் எல்லோரும் தங்களிடம் பலவிதமான திறமைகளையோ அல்லது இரகசியங்களையோ நிச்சயம் வைத்து இருப்பார்கள். ஆனால் அதை வேறு யாரிடமும் சொல்லாமலே இறந்து போனவர்களும் ஏராளம். இதில் எண்ணிலடங்கா மருத்துவ குறிப்புகளும் அடங்கும். ஒரு சிலர் இறக்கும் போது தன் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு இறப்பார்கள் அப்படி மிச்சம் இருப்பது தான் சில மருத்துவ குறிப்புகளும் இரகசியங்களும் அவற்றைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
- ஒருவர் எத்தனை வயதை எட்டியுள்ளார் எனபதை வேறு யாரிடமும் சொல்ல மாட்டார்கள்.
- பணத்தை ஒருவருக்கு கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அதை யாரிடமும் சொல்ல மாட்டார்களாம்.
- குடும்பத்தில் நடக்கக்கூடிய சண்டை, சச்சரவுகளை வெளியில் சொல்ல மாட்டார்கள்.
- ஏதேனும் நோய்க்கு மருந்து தயாரித்தால் அதில் சேர்க்கப்பட்ட பொருட்களின் விவரங்களை யாரிடமும் சொல்லமாட்டார்கள்.
- கணவன் மற்றும் மனைவிக்கிடையே நடக்கும் அந்தப்புர அனுபவங்களை யாரிடமும் சொல்லமாட்டார்கள்.
- யாருக்கேனும் ஏதேனும் பொருளை இரவலாக கொடுத்து இருந்தாலோ, தானமாக கொடுத்தாலோ வெளியில் சொல்லி பெருமை கொள்ள மாட்டார்கள்.