முட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்!!!

முட்டையில் இருக்கும் வெள்ளை கரு கொடுக்கும் நன்மைகள் அதிகமே. இதில் இருக்கும் கொழுப்பு சத்துக்கள் அதிகமே இதனால் உடல் பருமனை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை இது அதிகரிக்காது. ரத்தத்தில் அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்து சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும்.
கண்களின் உள் இருக்கும் கருவிழியில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை தினம் எடுத்து கொள்ளலாம். நாட்டு கோழி முட்டைகளில் இருக்கும் சத்துக்கள் சாதாரண முட்டைகளை விட அதிகம்.
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவோர் தினம் பச்சை முட்டையை குடித்து வர நல்ல உடல் அமைப்பை பெறலாம்.
இதயத்தின் ஆரோக்கியத்தில் அதிகம் பங்கு வகிக்கிறது முட்டை. எலும்புகளுக்கு நல்ல உறுதியை கொடுத்து சிறப்பாக செயல் பட செய்கிறது. மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து புத்துணர்ச்சியுடன் செயல் ஆக்கும்.
பக்கவாத பிரச்சனைகள் வராமல் தற்காத்து கொள்ளும். தினம் இரு முட்டைகள் சாப்பிடுவதால் நல்ல உடல் பராமரிப்பை பெறலாம்.