முட்டையை ஒவ்வொரு வகையான சருமத்திற்கும் பயன்படுத்தும் முறை!

முட்டையை ஒவ்வொரு வகையான சருமத்திற்கும் பயன்படுத்தும் முறை!

முட்டையை தலைமுடி மற்றும் சரும பிரச்சனைக்கும் பயன்படுத்துவதை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிலருக்கு முட்டையை எல்லா சருமத்திற்கும் பயன்படுத்தலாமா? என இருக்கும். முட்டையை எல்லா சரும வகைக்கும் ஏற்ப எப்படி பயன்படுத்தலாம் என இப்போது பார்க்கலாம்.

முட்டையை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை:-

  • சருமம் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமெனில் முட்டையை உடைத்து மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கரு இரண்டையும் நன்றாக கலக்கி முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் போதும்.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களாக இருந்தால் ஓட்ஸை பொடியாக்கி முட்டையுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவினால் எண்ணெய் பசையை தடுக்கலாம்.
  • முட்டை மற்றும் தயிரை நன்கு கலக்கி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமம் வெள்ளையாகும்.
  • எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் கருவளையம் மற்றும் கரும்புள்ளியை சரிசெய்ய முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெள்ளரிக்காய் சாறினை சேர்த்து முகத்தில் தடவினால் கருவளையம் மறைவதோடு எண்ணெய் பசை குறையும்.

 

 

Share this story