மாதுளை பழம் சாப்பிடுவதன் மூலம் இதயக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம்!

மாதுளை பழம் சாப்பிடுவதன் மூலம் இதயக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம்!

அதிகமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தாலும், கொழுப்புகள் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலமும் இதய நோய் ஏற்படுகிறது. இதய நோயால் பலரும் சாதாரணமாக உயிரை இழக்கின்றனர். இதய நோயை தடுக்க உடற்பயிற்சி செய்வது முக்கியம். உணவு பொருள்களில் மாதுளை பழத்தை சாப்பிடுவதால் இதய குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இதயத்தில் ஏற்படும் நோய்களை மாதுளை பழம் எப்படி சரிசெய்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

மாதுளை பழம் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:-

  • இதய குழாயில் அழற்சி இருந்தால் இதய நோய் ஏற்பட வழிவகுக்கும். மாதுளையில் அலர்ஜி எதிர்க்கும் பண்பு அதிகம் உள்ளது. எனவே தினமும் மாதுளை சாறை குடித்து வந்தால் இதய நோயில் இருந்து விடுபடலாம்.
  • இரத்த குழாயில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி நாளடைவில் இதய நோய்க்கு வழிவகுக்கும். மாதுளையில் உள்ள ஆண்டி- பாக்டீரியல் தன்மை வைரஸ்களை அழிக்கும் தன்மை கொண்டது.
  • மாதுளையை தினமும் சாப்பிட்டால் இதயம் விரிவடைவது குறையும்.
  • மாதுளையில் உள்ள ஆண்டி – ஆக்ஸ்டெண்டுகள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தளர்த்திவிடும்.
  • இதய தசைகளில் உள்ள கொழுப்புகளின் தேக்கத்தை மாதுளை தடுத்து இதய நோய் வராமல் தடுக்க முடியும்.
  • மாதுளை பழம் சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும்.
  • இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மாதுளை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈசிஜியில் ஏற்படும் மாற்றத்தை பார்க்கலாம்.

Share this story