வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

பருப்பு மற்றும் கொட்டை வகை உணவுகள் எப்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதில் வேர்க்கடலையை சொல்லலாம். இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக திகழ்வதோடு விலை குறைவானதாகவும் கிடைக்கிறது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை பற்றி இப்போது பார்ப்போம்.

வேர்க்கடலையின் பயன்கள்:

  • வேர்க்கடலை, முந்திரி பருப்பு, ஏலக்காய் மூன்றையும் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை ஒரு துணியி எடுத்து முளைக்கட்ட விட வேண்டும். பின்பு அதை எடுத்து நீர் ஊற்றி அரைப்பதன் மூலம் நிலக்கடலை பால் தயார் செய்யலாம்.
  • இரத்த கசிவை தடுக்கும் ஆற்ற கொண்டது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் அதிகமான இரத்த்ப் போக்கை தடுக்கும்.
  • பாஸ்பரஸ், கால்சியம், இரும்புசத்து அடங்கி உள்ளது. இதனால் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
  • உடம்பில் உள்ள புண்கள், கொப்பளங்கள் போன்றவற்றை சரி செய்யும் ஆற்றல் வேர்க்கடலைக்கு உண்டு.
  • இதை சாப்பிடுவதால் சருமத்தை பளபளப்பாக்க முடியும்.
  • உடல் பருமனை குறைக்க முயற்சி செய்பவர்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக இதை சாப்பிட்டால் அதிகளவு சாப்பாடு உட்கொள்ள முடியாமல் உடல் எடை வேகமாக குறையும்.

Share this story