வெள்ளை பூண்டு சாப்பிடுங்கள் பயனை பெறலாம்!

வெள்ளை பூண்டை நன்கு வறுத்து சாப்பிடுவதால் அஜீரண கோளாறுகள் நீங்கி வயிறு சுத்தம் ஆகும். கடின பொருட்களை எளிதில் கரைக்கும் பண்பு கொண்டது.
உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற வேண்டும் அதற்கு பூண்டை உணவில் சேர்க்க அனைத்தும் வெளியேறி விடும்.
அனைவருக்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் பூண்டு இருக்க வேண்டும்.
நம் ரத்தத்தில் உள்ள ரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கவும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும் வல்லமை கொண்டதே இந்த வெள்ளை பூண்டு.
அடிக்கடி இருமல் ஏற்படுவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் எடுத்து கொள்ள நல்ல பலனை தரும்.
நெஞ்செரிச்சல், இதய பிரச்சனைகளுக்கும் பூண்டு ஒரு நல்ல நிவாரணியாக கருதப்படுகிறது. முடி உதிர்வுக்கும் வெள்ளை பூண்டை அரைத்து பயன்படுத்தலாம்.
பூண்டை உணவில் மட்டுமல்லாமல் பாலிலும் கலந்து குடிக்க மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
உடலில் ரத்த ஓட்டம், அழுத்தம் அனைத்து பிரச்சனைகளுக்கும் வெள்ளை பூண்டு சிறப்பாக பயன் தர கூடியது.