சாக்லேட் அதிகம் சாப்பிடலாமா? நன்மை இருக்கா??

அதிக ஊட்ட சத்துக்கள் கொண்ட சாக்லேட்டில் இனிப்பு சுவை அதிகமே. அதனால் குறைவாக சாப்பிடுவதே நல்லது. இதிலும் நன்மைகள் அதிகம் இருக்கிறன.
சாக்லேட் சாப்பிடுவதால் கொழுப்புகள் சேர்ந்து அழகு பெறலாம் மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைந்து அழகான பொலிவை கொடுக்கும். மன நிலை சரி இல்லையா ஒரு சாக்லேட் சாப்பிடுங்கள் உங்கள் மன நிலை மாறும் பதட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது.
சாக்லேட்டில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் நம் உடலுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நம்மை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது.
மூளையின் செயல் திறனை அதிகரித்து நமது வேலையை சுறு சுறுப்பாக செய்ய உதவும். அதிக பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஒரு சாக்லேட் சாப்பிட பசி எடுக்காது.
ரத்த ஓட்டத்தை சீராக வைக்க வேண்டுமா சாக்லேட் சாப்பிடுங்கள் அதற்காக அளவுக்கு மீறியும் எடுத்து கொள்ள வேண்டாம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். இதய நோய்களுக்கும், மாரடைப்பு ஏற்படாமல் பராமரிக்கவும் இது பயன்படுகிறது.