காய்ச்சலுக்கு உகந்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும்!

காய்ச்சல் வருவது நாம் செய்யும் செயலிலும் மற்றும் சூழ்நிலையின் மாற்றத்தினாலும் தான். காய்ச்சல் வந்த பிறகு நாம் சரியான முறையில் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமே நம்மை விரைவில் குண படுத்த உதவும்.
உணவுகள் :
காய்கறிகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும், ஏனென்றால் வேக வைத்து சாப்பிட்டால் தான் சத்துக்களை அனைத்தும் நமக்கு கிடைக்கும் இதனால் காய்ச்சலால் உடலில் இருக்கும் நச்சு தன்மையை அழிக்க அதிகமான நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.
நீர் அருந்துவது :
தாகத்திற்கு அருந்தும் நீரினை கூட நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து பின்னர் அருந்த வேண்டும். நீரில் இருக்கும் கிருமிகளை அழிந்து சுத்தமாக மாறுவதால் குடிக்கும் பொழுது உடலுக்கு எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாது.
குளிர்பானங்கள் :
காய்ச்சல் இருக்கும் பொழுது குளிர்பானங்களை குடித்தால் கூடுதல் விளைவுகளையே ஏற்படுத்தும். அதிக குளிர்ச்சியை கொண்டு உள்ள குளிர்பானங்கள் சளி, இருமல் போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும், ஆகையால் காய்ச்சல் இருக்கும் பொழுது குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
டீஹைட்ரேஷன் குறைபாடு :
காய்ச்சலால் டீஹைட்ரேஷன் குறைபாடும் வரும் இதனை சரி செய்ய அதிக அளவு நீரினை அருந்த வேண்டும். இது உடலில் நீர் சத்தினை அதிகரிக்க செய்து நோய் தொற்றுகள் வராமல் தற்காத்து கொள்ளும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய பழங்களை கொண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம், இதனை குளிர்ச்சியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது.
குளிர்ச்சியை தவிர்த்து விடுங்கள் :
சாப்பிடும் உணவில் கூட குளிர்ச்சியை தவிர்த்து சூடான உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள், காப்பி அல்லது பால் அருந்துவதை கூட மிதமான சூட்டில் அருந்த உடலுக்கு நல்லது.