மீன் சாப்பிடுங்கள் பலனை பெறுங்கள் !!!

மீன் சாப்பிடுங்கள் பலனை பெறுங்கள் !!!

எந்த ஒரு அசைவ உணவையும் பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து குழம்பு செய்து சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கும். புற்று நோய் பாதிப்புகள் இல்லாமல் நம்மை தற்காத்து கொள்ள உதவுகிறது மீனில் இருக்கும் ஊட்ட சத்துக்கள்.

கண்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனையையும் தவிர்க்கும் ஒரு அசைவ உணவு என்று பார்த்தால் அது மீன் தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்துக்கள் இன்றி எவ்வித கோளாறும் ஏற்படுத்தாத ஒரே உணவு மீன்.

மீனை எவ்வளவு சாப்பிட்டாலும் அது உடலுக்கு கேடு விளைவிக்காது இதனால் ஆஸ்துமா  பிரச்சனைகள் அகலும். ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மீன்களில் இருப்பதால் மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.

ஞாபக மறதியை அதிகம் சந்திப்பவர்கள் வயதானவர்கள் அவர்கள்  தினம் தங்கள் உணவில் மீனை சேர்த்து கொள்ள நல்ல நினைவாற்றலை பெறலாம். கொழுப்புகள் ரத்தத்தில் அதிகம் இருந்தால் மீன் சாப்பிடுவதின் மூல அவற்றை குறைத்து நலம் பெறலாம்.

Share this story