செலரி இலைகள் சாப்பிடுங்கள்! நலம் பெறுங்கள்!
Sun, 3 Sep 2017

பார்க்க கொத்தமல்லி இலைகளின் தோற்றத்தையே கொண்டது தான் இந்த செலரி.
செலரியின் ஆரோக்கியம் :
உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்து கொள்ள செலரியை தினம் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
- குடல்களில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி சுத்திகரிக்க மற்றும் செரிமான பிரச்சனையை தீர்த்து நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும் நார் சத்துக்கள் செலரியில் காணப்படுகிறது.
உடலில் உருவாகும் நச்சு தன்மையை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.
- மன நிலை சரி இல்லாத நிலையில் இதனை எடுத்து கொள்ள மன நிலை மாறும். புதிய உணர்வை பெறுவீர்கள்.
கல்லீரலில் ஏற்படும் கோளாறுகள், கல்லடைப்பு போன்றவை ஏற்படாமலும் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்படாமலும் நம்மை பராமரித்து கொள்கிறது இதை நாம் உணவில் சேர்த்து சுவைக்க.
- தாலைட் ஸ்ட்ரெஸ் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும்.
இன்றைய நாளில் உடல் பருமனை குறைப்பது பெரிய பிரச்சனையாக இருக்கும். அதற்கான நல்ல தீர்வே இந்த செலரி இலைகள். இதனை அரைத்து இதன் சாற்றை தினம் அருந்துங்கள் எடையை குறையுங்கள்.