ஆப்பிள் விதைகளை சாப்பிடலாமா? சாப்பிட்டால் ஏதேனும் விளைவுகள் வருமா?
Sep 25, 2017, 18:45 IST

ஆப்பிள் பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அப்படி சாப்பிடும் பொழுது அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் சிலரிடத்தில் காண படும். அப்படி சாப்பிடுவதால் தீமைகள் உருவாகலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஆப்பிள் விதைகள் :
- ஆப்பிள் விதைகளை இருக்கும் சயனைடு நச்சு தன்மை கொண்டதே. இந்த சயனைடு ஆப்பிள் பழத்தில் மட்டும் இல்லை. இதர பழங்களிலும் காண படுகிறது, நாம் சாப்பிடும் ஆப்பிள் விதைகள் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை தடுத்து, உயிர்க்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது.
- ஒரு விதைகளை சாப்பிட்டாலே அது உடலுக்கு ஆபத்து தான், இதனை அறியாமல் அனைத்து விதைகளையும் சாப்பிட்டால் முதலில் சுவாச உறுப்புகளை பாதித்து, இதயம், மூளை, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய துடிப்பில் மாற்றத்தை உண்டு பண்ணி உயிரை கொள்ளும் அபாயத்தை ஏற்படும்.
- விதைகளை வாயில் போட்டால் ஆபத்து என்பது இல்லை, அதனை நாம் விழுங்கிய பின்னர் அதில் இருக்கும் நச்சு தன்மை வெளிப்பட்டு உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும், ஆகவே பயம் கொள்ளாமல் வாயில் விதைகள் இருந்தாலும் அதனை உடனே துப்பி விடுவது நல்லது. வேணுமென்றால் தண்ணீரை கொண்டு கொப்பளிக்கலாம்.
- ஒருவேளை தெரியாமல் உண்டால் கூட அதனால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சமே. வாந்தி, மயக்கம், தலை சுத்தல், வயிற்றில் வலி போன்றவை ஏற்படும், அதிகம் உட்கொள்ளாமல் கவனத்துடன் ஆப்பிள் சாப்பிடுங்கள்.
- ஆப்பிள் சாப்பிடும் பொழுது அதனை சுத்தம் செய்து சாப்பிடுவது போலவே அதன் விதைகளையும் எடுத்த பின்னரே சாப்பிட பழகுங்கள், உங்கள் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே விரைவில் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். சயனைடு போலவே ஆப்பிளில் இருக்கும் அமிக்டாலின் உட்புற உறுப்புகளை பாதிக்கும்.