வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

நீரை நன்கு கொதிக்க வைத்தே பருக வேண்டும்.அப்பொழுது தான் அதிலுள்ள கிருமிகள் அழியும்.
வெந்நீரை எடை குறைய விரும்புவோர் இதை தினமும் பருக ஆரம்பியுங்கள். சாப்பிட்ட பின் உணவு ஒத்துக்கொள்ளாமல் நெஞ்செரிச்சல், நெஞ்சில் வலி ஏற்பட்டால் உடனே வெந்நீர் குடிக்க சரி ஆகும், சீரகம் இரைப்பையை சென்றடையும்.
குழந்தைகளுக்கு வெந்நீர் கொடுப்பதே நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது, மற்றும் செரிமானம் சரியாக நடக்கவும் வழி வகுக்கிறது.
இஞ்சியை சக்கையாய் இடித்து நீரை வடிகட்டி வெந்நீரில் கலந்து குடிக்க சளி, இருமல் தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவோம்.
காய்ச்சல் வந்தால் வெந்நீரை தான் குடிக்கவும், குளிக்கவும் உபயோகிக்க வேண்டும், இதை வைத்து உடலுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடம்பு வலி தீரும், மற்றும் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யும்.
வெந்நீர் நச்சு கிருமிகளை அளிக்கும் சக்தி உள்ளது, அதை கொண்டு கை, கால்களை தினமும் கழுவ ரொம்ப ஆரோக்கியமானது.