Tamil Wealth

கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள இவ்வளவு பிரச்சனைகள் சரியாகுமா?

கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள இவ்வளவு பிரச்சனைகள் சரியாகுமா?

தென்னிந்தியாவில் கறிவேப்பிலை இல்லாமல் எந்த ஒரு உணவும் சமைக்கப்படுவதில்லை. எண்ணெயை சூடாக்கி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிசம் செய்வார்கள். கறிவேப்பிலையில் பலவிதமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக சொன்னால் கண், முடி மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் பாதுகாக்கும். இப்போது கறிவேப்பிலை சாறினை குடித்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

கறிவேப்பிலை ஜூஸ் தயாரிக்கும் முறை:-

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதனுடன் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் வடிக்கட்டி நீரை தனியாக பிரித்து கொள்ள வேண்டும். கிடைக்கும் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.

கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டையாக உருட்டி பின்னர் அதை மோர் சேர்த்து கலந்து பருகினால் போதும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை குடிக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் சீரக பொடி மற்றும் கறிவேப்பிலை பொடி இரண்டையும் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் போதும் உடலின் பல பிரச்சனைகள் நீங்கும்.

கறிவேப்பிலையை நீரில் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம்

கறிவேப்பிலை நீரை தொடர்ந்து குடிப்பதால் வாயுத்தொல்லை, வயிற்று போக்கு, பித்தம் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனையும் அதிக அளவில் குறையும்.

Share this story