Tamil Wealth

வீட்டில் நீரினை மண்பானையில் வைத்து குடிக்க வேண்டும்! பிளாஸ்டிக் தவிர்த்து விடுவது நல்லது!

வீட்டில் நீரினை மண்பானையில் வைத்து குடிக்க  வேண்டும்! பிளாஸ்டிக் தவிர்த்து விடுவது நல்லது!

வீட்டில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் குவளை போன்றவற்றை பயன்டுத்துவதை தவிர்த்து மண்ணால் ஆன பொருட்களை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.

பிளாஸ்டிக் பொருட்கள் என்றாலே நமக்கு தீங்கு விளைவிக்க கூடியதே. பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே போட்டு விட்டோம் என்றால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் மற்றும் பாக்டீரியாக்கள் சேரும், நாம் மேலும் அதில் நீரினை ஊற்றி அருந்தினால் நாம் பல உடல் உபாதைகளுக்கு ஆளாவோம் என்பதை மறவாமல் பயன்படுத்துங்கள்.

மண்ணால் செய்த பொருட்களை கொண்டு சமைக்கவோ அல்லது அதில் நீரினை ஊற்றி வைக்கவோ நமக்கு ஆரோக்கியமே. மண்ணில் இருக்கும் தனிமங்கள் கிருமிகளை அழித்து தூய்மையான நீரினை கொடுக்கும். அதற்காக மண்ணால் உருவான பொருட்களில் நீரினை கொண்டு செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பிளாஸ்டிக் தவிர்த்து இதர குவளையை பயன்படுத்தி ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்.

விலை குறைவு என்று நினைத்து பிளாஸ்டிக் குவளையை வாங்குவதை நிறுத்துங்கள். நாம் ஒவ்வொரு முறையும் தண்ணீரினை ஊற்ற பிளாஸ்டிக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீருடன் கலந்து அதனை நாம் அருந்த உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும்.

Share this story