Tamil Wealth

சுயிங்கத்தை விழுங்க கூடாது! விழுங்கினால் ஆபத்தே!

சுயிங்கத்தை விழுங்க கூடாது! விழுங்கினால் ஆபத்தே!

சுயிங்கத்தை அனைவரும் நன்கு மென்ற பிறகு துப்பிட வேண்டும். சிலர் சுவையின் தாக்கத்தினாலோ அல்லது தெரியாமலோ விழுங்கி விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு உண்டாக்கும் உடல் நல கோளாறுகளை காணலாம்.

சுயிங்கம் பார்க்கவே கொழ கொழ தன்மையுடன் காண படுவதால் விழுங்கியவுடன் நேரடியாக இரைப்பையை சென்று அடையும். வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். எலாஸ்டோமெர்ஸ் மற்றும் எமுல்சிஃபையர்ஸ் போன்ற வேதி பொருட்கள் அதிகம் இருப்பதால் இதனை அதிகம் எடுத்து கொண்டால் அது உடல் உறுப்புகளை பாதித்து பல இன்னல்களை சந்திக்க நேரிடும். கல்லீரலில் குறைபாடுகளை உண்டு பண்ணி பெரிய விளைவையே ஏற்படுத்தும் அளவிற்கு சென்று விடும். இனிப்பூட்டும் வகையில் இதில் அதிகம் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு ரத்தத்தை பாதிப்படைய செய்து கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும்.

இதனால் உடலில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்வதே நல்லது. சுயிங்கம் குடலில் ஒட்டி கொண்டால் ரத்த ஓட்டத்தை பாதித்து குடலில் புண்கள் உருவாகும் மற்றும் புற்று நோய்க்கான செல்களும் உருவாகும் அபாயம் உள்ளது.

Share this story