கையில் பணம் தங்கவில்லையா? இதை செய்தால் போதும்!

எவ்வளவு தான் சம்பாதித்தாலும் சேமித்து வைத்தாலும் பணம் தங்காமல் செலவு ஆகிக் கொண்டே இருக்கிறதா. அப்படியெனில் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும்.
ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசி ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்கவும். பின்னர் அதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிய பின்னர் அந்த கின்னத்தை மூடாமல், வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் திறந்தபடியே வைக்க வேண்டும்.
தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைப்பது நல்ல பலனை தரும். மேலும் தினமும் இரண்டு நிமிடமாவது இதை தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும்.
இதை தினமும் செய்து வந்தால், வீட்டின் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து மீண்டும் வழிபட வேண்டும்.
இதை எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வமும் வளமும் அதிகரித்து கொண்டே இருக்கும்.