இதில் எதாவது இரண்டு உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடாதிங்க! அப்படி சாப்பிட்டால் விஷத்தன்மை அதிகரிக்குமாம்!!!
Sep 12, 2017, 15:00 IST

சாப்பாடு என்று வந்துவிட்டால் நாம் எதையும் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையேல் உடல் நலக் கோளாறு அதிகரிக்கும்.
ஒரே நேரத்தில் சாப்பிட தவிர்க்க வேண்டியவை:-
- தேன் மற்றும் நெய் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும். எனவே இதில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
- வாழைப் பழம் சாப்பிடும் போது தயிர் மற்றும் மோர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது,
- சாப்பிட்டு முடித்த பின்னர் பழங்களை சாப்பிடக் கூடாது. அப்படி செய்தால் பழங்களின் சத்துகள் அனைத்தும் நம்க்கு கிடைக்காமல் போய்விடும்.
- காய்கறிகள் நிறைந்த உணவை சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்து கொள்ள கூடாது. கருவாடு மற்றும் மீன் போன்ற உனவை சாப்பிடும் போது தயிர், மோர் சேர்க்கக் கூடாது.
- கோதுமையை நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது. ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கள் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது. அதே சமயம் உடல் குண்டாக இருப்பவர்கள் கோதுமை நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.