நாயுருவி கொடுக்கும் நலன்கள் !

காஞ்சரி என்ற வேறு பெயரையும் கொண்டது இந்த நாயுருவி. இதன் நுனி முதல் அடி வரை உள்ள அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதே.
நாயுருவியின் மருத்துவ குணம் :
உடலில் வெளியாகும் அதிகமான வியர்வையை கட்டு படுத்த இதன் தண்டுகள் உதவும் மற்றும் கெட்ட கொழுப்புகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
நாயுருவி இலைகளை வேக வைத்து அதனுடன் உப்பு, சீராக சேர்த்து சமைத்து சாப்பிட அதிக சளியால் நுரையீரலில் ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்தும்.
இதன் வேர்களில் இருந்து பெறப்படும் சாற்றை குடிக்க வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகளையும் சரி செய்யும் திறன் கொண்டது.
நரம்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யும் விதத்தில் பெரிதும் பயன்படுகிறது.
நாயுருவியில் காணப்படும் காய்ந்த தண்டுகளை நன்கு இடித்து தூளாக்கி அதனை நீருடன் கலந்து கருமை நிறம் மற்றும் பருக்கள் இருக்கும் இடங்களில் தொடர்ந்து தேய்த்து வர நல்ல தோற்றத்தை பெறலாம் அதனுடன் கடலை மாவையும் சேர்த்து கொள்ளலாம்.